Wednesday, February 29, 2012


 தமிழ்க் கடல் இராய.சொக்கலிங்கனார் ~

 அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 29/02/2012


95. தமிழ்ப் பேரறிஞர் தமிழ்க் கடல் இராய.சொக்கலிங்கனார் (1898-1974).

95. இப்பேரறிஞரின் வியக்கத்தக்க நினைவாற்றல் நெஞ்சகத்தே ஒரு தமிழ் அணைக்கட்டையே அமைத்திருந்தது. இப்பெருமானின் ‘காந்தி கதை’ தமிழ் மொழியில் காந்தி பற்றி உருவாக்கம் கொண்ட முதற் காவியம்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
 




Tuesday, February 28, 2012

புலவர் இ.மு.சுப்பிரமணியம் ~ 

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 28/02/2012
94. செய்தித் தமிழ்மாலை சிந்தனை நற்பேழை புலவர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை (1896-1975).

94. இரண்டாயிரத்து நூற்று ஐந்து அடிகளைக் கொண்ட “இராமாயண அகவல்” படைத்த இப்பேரறிஞர் பள்ளிப் பிள்ளைகளுக்கென எழுதிக் குவித்த பாட நூல்கள் பலப்பல.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0




 

Monday, February 27, 2012

செந்தமிழ்க் களஞ்சியம் மகாவித்துவான் மே. வீ.வேணுகோபால் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 27/02/2012


93. சிந்தாமணிப் பெட்டகம் செந்தமிழ்க் களஞ்சியம் மகாவித்துவான் மே. வீ.வேணுகோபால் பிள்ளை (1896-1985).

93. நான்கு பகுதிகளாக உருவாக்கம் கொண்ட ‘கம்பராமாயண உரைநடை’ ‘தமிழ் அன்றும்- இன்றும்’ ஆகிய இப்பெருமகனாரின் திருநூல்கள், தமிழின் அரிய செல்வங்கள்; தமிழரின் இலக்கியப் பேழைகள்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0




Sunday, February 26, 2012

சொல்லின் செல்வர் அறிஞர் இரா.பி.சேதுப்பிள்ளை ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 25/02/2012

92. செந்தமிழ் நிறைநிலா சொல்லின் செல்வர் அறிஞர் இரா.பி.சேதுப்பிள்ளை (1896-1961).

92. தமிழ் மொழியில் திறனாய்வு நூல்கள் வெளியிடப்படாத குறையைத் தமது ஆய்வு நூல்களால் அகற்றிய இப்பேரறிஞர், இனிய குரல் வளத்தோடு ஆற்றிய அறிவார்ந்த உரைப் பொழிவுகள் உயர்வு பெற்றவை.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

எழுச்சிகொண்ட தமிழ் மறவர் ஏந்தல் மங்கலங்கிழார் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 24/02/2012

91. இமைப்போதும் தமிழ் மறவா , எழுச்சிகொண்ட தமிழ் மறவர் ஏந்தல் மங்கலங்கிழார் (1895-1953).

91. தமிழுணர்வையும், தமிழ்க் கல்வியையும் ஊரெங்கும் பரப்பும் உயர் நோக்கில் தமிழ்ச் சங்கம் அமைத்து நாடு போற்றும் நற்றமிழ்த் தொண்டாற்றிய இப்பெருந்தகை.  வாழ்ந்த காலம் முழுமையும் தமிழை வாழ வைக்கவே  தமிழ்ச் சங்கம் பயன்பட்டது.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்

0

Thursday, February 23, 2012

நூலாசிரியர் வெ.சாமிநாதர் ~ 

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 23/02/2012

90. விழுமிய சிந்தனையாளர் வித்தக நூலாசிரியர் வெ.சாமிநாத சர்மா
(1895-1978).


90. தமிழறிந்த அனைவரும் உலகமறிந்த ஞானச் செறிவு பெற வேண்டுமென ஆசை கொண்ட இப்பேரறிஞர் தேசாபிமானத்தைத் தழைக்கச் செய்து, உலகாபிமானத்தைக் கிளைக்க செய்யும் நூல்களை எழுதினார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

Wednesday, February 22, 2012

பன்னூல் ஆசிரியர் பண்டிதர் அருணகிரிநாதர் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 22/02/2012

89. பைந்தமிழ்க் காவலர் பன்னூல் ஆசிரியர் பண்டிதர் அருணகிரிநாதர் (1895-1974).

89. தமிழாசிரியராகப் பணியாற்றி, புதின ஆசிரியராகப் புகழ்பெற்று, பத்திரிகை ஆசிரியராகவும் மேடைப் பேச்சாளராகவும் விளங்கித் தமிழ் காவலராகத் திகழ்ந்தார் இப்பேராசான்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

Tuesday, February 21, 2012

தமிழ்நூல் பதிப்பாளர் தவத்திருசிவஞான பாலைய அடிகளார் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 21/02/2012

88. தமிழ்க் கல்லூரி நிறுவனர் தமிழ்நூல் பதிப்பாளர் தவத்திருசிவஞான பாலைய அடிகளார் (1894-1965).

88. பல்லாயிரக் கணக்கான தமிழ்ப் புலவர்களை உருவாக்கியுள்ள மயிலம் தமிழ்க் கல்லூரி யைத் தமிழ் நாட்டில் தோன்றிய ‘முதல் கல்லூரி’யாக உருவாக்கம் கொள்ளச் செய்தவர் இப்பேரருளாளர்.
தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0



Monday, February 20, 2012

தமிழறிஞர் பூதலப்பட்டு சிரீராமுலு ~ 

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 20/02/2012

87. புதியநலம் வழங்கிய போற்றற்குரிய தமிழறிஞர் பூதலப்பட்டு சிரீராமுலுரெட்டி (1892-1971).

87. திருக்குறள், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களைத் தெலுங்கு மொழியில் கண்டு கொள்ள வைத்த இப்பேரறிவாளர் பாரதி பாடல்களையும் தெலுங்கில் மொழி பெயர்த்துள்ளார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0



Saturday, February 18, 2012

வளர்தமிழ் நூலாசிரியர் பேராசான் சதாசிவப் பண்டாரத்தார் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 18/02/2012


86. வரலாற்றுப் பேராசிரியர் வளர்தமிழ் நூலாசிரியர் பேராசான் சதாசிவப் பண்டாரத்தார் (1892-1960).
86. தமிழ்நாட்டு வரலாற்றைத் தமிழர் தமிழ் மொழியில் வழியே அறிந்து கொள்ள வழிகாட்டிய முன்னோடியாகத் திகழ்ந்த இப்பேராய்வாளர் உருவாக்கிய வரலாற்று நூல்கள் வரலாறு படைத்தவை.
தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0


Friday, February 17, 2012

அறிஞர் ந.சி.கந்தையா ~ அhttp://www.natpu.in/?p=20126றிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 17/02/2012

85. உரைநடைச் செல்வர் உணர்வூட்டிய தமிழர் அறிஞர் ந.சி.கந்தையா பிள்ளை (1893-1967).

85. பத்துப்பாட்டு, அகநானூறு, பதிற்றுப்பத்து, கலிங்கத்துப்பரணி, பரிபாடல், கலித்தொகை முதலிய சங்க நூல்கள் பலவற்றை உரை நடையில் வழங்கிய இப்பேராசிரியர் இலங்கைத் தமிழறிஞராவார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

Thursday, February 16, 2012

திருக்கோயில் செம்மல் திரிசிரபுரம் இரா.பஞ்சநதம் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 16/02/2012


84. தென்தமிழ்ச் செல்வர் திருக்கோயில் செம்மல் திரிசிரபுரம் இரா.பஞ்சநதம் பிள்ளை (1893-1968).

84. தமிழ்நாட்டுத் திருக்கோயில்கள் பற்றிய முறையான வரலாறுகளை முதன்முதலில் எழுத வழங்கிய இப்பெருமகனார் திருச்சியில் ‘தமிழ் ஆராய்ச்சிக் கழகம்’ என்றோர் அமைப்பை உருவாக்கம் கொள்ளச் செய்தார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

Tuesday, February 14, 2012

இலக்கியத் திருவிளக்கு பேராசிரியர் வேங்டராசுலு ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 14/02/2012

83. இலக்கணப் பெருங்கடல் இலக்கியத் திருவிளக்கு பேராசிரியர் வேங்டராசுலு (1893-1963).

83. இலக்கணத் துறையில் கடல்போன்ற இப்பெருந்தகையின் கருத்துப் பரப்பு. ஆய்ந்து வெளியிட்ட நூற்றுக்கணக்கான கட்டுரைகளில் போற்றத்தக்க புதிய செய்திகளை நிலை நாட்டியுள்ளது.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

சீர்திருத்தக் காவலர் அறிஞர் சொ.முருகப்பா ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 13/02/2012


82. செந்தமிழ்ச் செம்மல் சீர்திருத்தக் காவலர் அறிஞர் சொ.முருகப்பா (1893-1956).
82. ‘குமரன்’ என்னும் மாத இதழை 1923-ஆம் ஆண்டில் தொடங்கி வெளியிட்ட இப்பெருந்தகை. இதழைத் தமிழின் வளர்ச்சிக்கும், தமிழ் எழுத்தாளர்களின் மலர்ச்சிக்கும் களமாகக் கொண்டார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0



Sunday, February 12, 2012

தமிழ்ப் பேராசான் சுவாமி விபுலாநந்தர் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 11/02/2012

81. இலங்கைத் தமிழாகரர் இசை தமிழ்ப் பேராசான் சுவாமி விபுலாநந்தர் (1892-1949).

81. இசைத்தமிழ் ஞானக் கதிராக ‘யாழ்நூல்’ இயற்றியருளிய இப்பெரியார் மகாகவி பாரதியின் பாடல்களை ஈழ நாட்டில் பற்றிப் பரவிடச் செய்த பாரதி பக்தர்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்





Friday, February 10, 2012

தமிழ்நூல் உரையாசான் டாக்டர். ஆர்.கே.சண்முகம் - அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 10/02/2012

80. தமிழிசைத் தளபதி தமிழ்நூல் உரையாசான் டாக்டர். ஆர்.கே.சண்முகம் செட்டியார் (1892-1953).

80.சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிப் பதிப்பித்த இப்பேரறிவாளர். தமிழிசையின் உயிர் நாடியான பண்களைப் பற்றி ஆராய்வதில் பெரு விருப்பம் கொண்டு, பண் ஆராய்ச்சிக் குழுவை உருவாக்கினார்.
தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

Thursday, February 09, 2012

பேராசிரியர் மயிலை சிவமுத்து ~

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 09/02/2012

79. மாணவர் மன்றப் புகழ்ச்செல்வர் மாணிக்கத் தமிழுக்கோர் உயிர்நாடி பேராசிரியர் மயிலை சிவமுத்து (1892-1968).

79. அறுபது ஆண்டுகளுக்கு முன்னமேயே சிறுவருக்காக வெளியிடும் நூல்கள் உருப்பெறுகின்ற உள்ளீட்டையும், உருவ அமைப்பையும் வரையறை செய்த இப்பேராசிரியர், அத்தகைய நிலையில் பல நூல்களை வெளியிட்டார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்






Wednesday, February 08, 2012

அறிஞர் பெ.நா.அப்புசுவாமி ~ 

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 08/02/2012


78. அறிவியல் தமிழுக்கோர் ஊற்றுக்கண் அருந்தமிழ் விளைவுக்கொரு நாற்றங்கால் அறிஞர் பெ.நா.அப்புசுவாமி (1891-1986).

78.தமிழின் தொன்மையை உலகறியச் செய்ய வேண்டுமென்பதே பாரதியாரின் ஆசை; அளப்பரிய ஆர்வம்; அந்த ஆசையை, ஆர்வத்தை நிறைவு செய்வதே என் வேலை” என மூச்சுள்ளவரை தமிழ்த் தொண்டாற்றிய மூதறிஞர்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

Tuesday, February 07, 2012

ஞானச்செல்வர் அறிஞர் பொ.திருகூடசுந்தரம் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 07/02/2012


77. தேசப்பிதாவின் சீரிய புதல்வர் தெய்வத்தமிழின் ஞானச்செல்வர் அறிஞர் பொ.திரிகூடசுந்தரம் பிள்ளை (1891-1969).

77. ஏறத்தாழ எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் குடும்பக் கட்டுப்பாடு பற்றிச் சிந்தித்து “விவாகமானவர்க­ளுக்கு ஒரு யோசனை என்னும் அறிவார்ந்த அரிய நூலை வெளியிட்டுப் பெருமைப் பெற்ற பேரறிஞர்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

Monday, February 06, 2012

புரட்சித்தமிழ் ஞாயிறு பாவேந்தர் பாரதிதாசன் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 06/02/2012
76. புலர்காலைக் கவித்தென்றல் புரட்சித்தமிழ் ஞாயிறு பாவேந்தர் பாரதிதாசன் (1891-1964).
76. இந்திய நாட்டின் முதல் கவிதை இதழை 1935-ஆம் ஆண்டில் தொடங்கி, அந்த இதழுக்கு ‘சிரீசுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம்’ எனப் பெயர் சூட்டி மகிழ்ந்த புரட்சிக் கவிஞர்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0



Sunday, February 05, 2012

வித்தகத் தமிழ்ச் செல்வர் அறிஞர் வையாபுரி ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 05/02/2012

75. வித்தகத் தமிழ்ச் செல்வர் அறிஞர் வையாபுரிப் பிள்ளை (1891-1956).

75. உரையாலும் உணர்த்திய செய்திகளாலும் நூல்களாலும் தமிழின் வரலாற்றில் மிகச் சிறந்த பேரறிவாளராகத் திகழ்ந்த இப்பெரியார். ஆய்வுத் துறையில் முன்னோடி எனப் போற்றப்பெற்றார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

Saturday, February 04, 2012

முத்தமிழ் மாமுனிவர் சுத்தானந்த பாரதியார் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 04/02/2012
74. ஆயுள்காப்பியம் அருளிய முத்தமிழ் மாமுனிவர் சுத்தானந்த பாரதியார் (1891-1990).

74. தமிழில் வரலாற்றில் பிரமிக்கத்தக்க பெருந்தொண்டாற்றிய இப்பேரருளாளர் வாழ்ந்தது தொண்ணூற்று மூன்று ஆண்டுகள் வழங்கிய நூல்களோ ஆயிரத்திற்கும் மேற்பட்டவை சாதனைச் சரித்திர நாயகர்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்


http://www.natpu.in/?p=20103http://www.natpu.in/?p=20103

Friday, February 03, 2012

வளர்தமிழ் பேரார்வலர் டாக்டர் சுநீர்குமார் சாட்டர்சி ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 03/02/2012


73. வங்கத்துத் தமிழறிஞர் வளர்தமிழ் பேரார்வலர் டாக்டர் சுநீர்குமார் சாட்டர்சி (1890-1978).

73. பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வெளியான, ‘பாரத மொழிகளின் இலக்கிய வரலாறு’ என்னும் பெருநூலில் வங்கத் தமிழறிஞரான இப்பேராசிரியர். தமிழர் பற்றிய தனிப் பகுதியை மிகச் சிறப்பாக எழுதியுள்ளார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்




Thursday, February 02, 2012

பைந்தமிழ் இசைச்செல்வர் பாடலாசிரியர் பாபநாசம் சிவன் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 02/02/2012

72. பக்திப் பாவலர் பைந்தமிழ் இசைச்செல்வர் பாடலாசிரியர் பாபநாசம் சிவன் (1890-1973).

72. இசை வாணர்கள் விரும்பிப் பாடும் இசைத்திறம் கொண்டவையென இப்பெருந்தகை இயற்றிய பாடல்கள் தமிழிசைக்கு உரமும், ஊட்டமும் அளித் தனிப் பெருங் கொடைகள்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

Wednesday, February 01, 2012

மறுமலர்ச்சி எழுத்தாளர் அறிஞர் வ.இரா. ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 01/02/2012


71. மறுமலர்ச்சி எழுத்தாளர் மாக்கவியின் மாணாக்கர் அறிஞர் வ.(இ)ரா. (1889-1951).

71. மிக மிகப் பழைமையான நம்பிக்கைகளோடு வாழ்ந்த குடும்பத்தில் பிறந்த இப்பெருமான் மிக மிகப் புதுமையான வண்ணங்களோடு வாழத் தொடங்கி, தமது எழுத்தால், தமிழ் மக்களை, ஒரு மறுமலர்ச்சி உலகில் உலா வரச் செய்தார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0


செந்நாப்புலவர் சிறப்புரை வித்தகர் ஆ.கார்மேகக் கோனார் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 31/01/2012

70. செந்நாப்புலவர் சிறப்புரை வித்தகர் ஆ.கார்மேகக் கோனார் (1889-1957).

70. “நல்லிசைப் புலவர்கள்” என்னும் ஆராய்ச்சி நன்னூலை உருவாக்கியளித்த இப்பேராசிரியர் சிலப்பதிகாரத்தை உரைநடையில் இனிமையும் எளிமையும் வாய்ந்ததாகப் படைத்து வழங்கினார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

சான்றாண்மைப் பேராசான் பேரறிஞர் கா.சு.பிள்ளை ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 30/01/2012

69. சட்டநூல் வல்லுநர் சான்றாண்மைப் பேராசான் பேரறிஞர் கா.சு.பிள்ளை (1888-1945).

69. இப்பெருமான் உருவாக்கியளித்த ‘இலக்கிய வரலாறு’ வரலாற்று நூல்களுக்கெலலாம் வழிகாட்டியானது பல்கலைப் பேராசானாய்ப் பன்னூல் ஆசிரியராய்த் திகழ்ந்து பெரும் புகழ் பெற்றவர் இப்பெருந்தகை.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0