Showing posts with label அறிவோம் அறிஞர்களை. Show all posts
Showing posts with label அறிவோம் அறிஞர்களை. Show all posts

Monday, March 26, 2012

செந்தமிழ்க் காவலர் அறிஞர் சாமி.சிதம்பரனார் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 26/03/2012


100. சீர்திருத்தச் செம்மல் செந்தமிழ்க் காவலர் அறிஞர் சாமி.சிதம்பரனார் (1900-1961).

100. அவர் சொன்னார் இவர் சொன்னார் என ஏற்பது இகழ்ச்சி; எவர் சொன்னாலும் என்ன சொன்னார்? எதற்காகச் சொன்னார்!’ என்பதை ஆய்ந்து ஏற்பதே வளர்ச்சி என்றார் இப்பேரறிவாளர்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்

Sunday, March 25, 2012

பெரும்புலவர் மயிலை சீனி வேங்கடசாமி ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 25/03/2012

99. ஆராய்ச்சிப் பேரறிஞர் அதிநுட்பப் பெரும்புலவர் மயிலை சீனி வேங்கடசாமி (1900-1980).

99. “மறைந்து போன தமிழ் நூல்கள்” என மகுடமிட்டு ஓர் அரிய திருநூலைப் படைத்த இப்பேரறிஞர் “களப்பிரர் காலத் தமிழகம்” என்னும் ஆய்வு நூல் வெளியிட்டுப் பெருமை பெற்றார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

Monday, March 19, 2012

அருந்தமிழ்க் களஞ்சியம் அறிஞர் கீ.இராமலிங்கனார் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 19/03/2012


98. ஆட்சிமொழி அருங்கலம் அருந்தமிழ்க் களஞ்சியம் அறிஞர் கீ.இராமலிங்கனார் (1899-1986).

98. ஆட்சிமொழியாகத் தமிழ் அரியணை ஏறுமென்ற நம்பிக்கைகளில் ஆட்சிச் சொற்களைத் தொகுத்து, அதனை நடைமுறைப்படுத்த செயற்கரிய பணிசெய்தவர் இப்பெரியார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்

Tuesday, March 06, 2012

தித்திப்புப் புதினப்பேரூற்று எழுதுகோல் மன்னர் பேராசிரியர் கல்கி ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 02/03/2012


97. தேசியத் தமிழ்க் கொண்டல் தித்திப்புப் புதினப்பேரூற்று எழுதுகோல் மன்னர் பேராசிரியர் கல்கி (1899-1954).

97. தமிழின் வரலாற்று நெடுங்கதைப் பிதாமகர் உரைநடைக்கு நலமும், வளமும் ஊட்டிய உரைநடைச் சித்தர் தமிழின் செழுமைக்குப் பன்முகப் பணியாற்றிய தமிழச் செல்வர்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்

Thursday, March 01, 2012

தத்துவநூல் ஞானமணி தவசீலர் சுவாமி சித்பவானந்தர் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 01/03/2012

96. தபோவனத்துத் தமிழ்ஞானி தத்துவநூல் ஞானமணி தவசீலர் சுவாமி சித்பவானந்தர் (1898-1985).

96. இப்பேரருளாளரின் நூல்கள் அனைத்தும் இறைவனது திருவடிப் பேற்றை அடைவதற்கு வழி காட்டுபவை. அதனையே நோக்கமாக்கி நிலை நாட்டுபவை அவை தமிழின் அருட் சொத்துகள்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0
 



Wednesday, February 29, 2012


 தமிழ்க் கடல் இராய.சொக்கலிங்கனார் ~

 அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 29/02/2012


95. தமிழ்ப் பேரறிஞர் தமிழ்க் கடல் இராய.சொக்கலிங்கனார் (1898-1974).

95. இப்பேரறிஞரின் வியக்கத்தக்க நினைவாற்றல் நெஞ்சகத்தே ஒரு தமிழ் அணைக்கட்டையே அமைத்திருந்தது. இப்பெருமானின் ‘காந்தி கதை’ தமிழ் மொழியில் காந்தி பற்றி உருவாக்கம் கொண்ட முதற் காவியம்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
 




Tuesday, February 28, 2012

புலவர் இ.மு.சுப்பிரமணியம் ~ 

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 28/02/2012
94. செய்தித் தமிழ்மாலை சிந்தனை நற்பேழை புலவர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை (1896-1975).

94. இரண்டாயிரத்து நூற்று ஐந்து அடிகளைக் கொண்ட “இராமாயண அகவல்” படைத்த இப்பேரறிஞர் பள்ளிப் பிள்ளைகளுக்கென எழுதிக் குவித்த பாட நூல்கள் பலப்பல.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0




 

Monday, February 27, 2012

செந்தமிழ்க் களஞ்சியம் மகாவித்துவான் மே. வீ.வேணுகோபால் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 27/02/2012


93. சிந்தாமணிப் பெட்டகம் செந்தமிழ்க் களஞ்சியம் மகாவித்துவான் மே. வீ.வேணுகோபால் பிள்ளை (1896-1985).

93. நான்கு பகுதிகளாக உருவாக்கம் கொண்ட ‘கம்பராமாயண உரைநடை’ ‘தமிழ் அன்றும்- இன்றும்’ ஆகிய இப்பெருமகனாரின் திருநூல்கள், தமிழின் அரிய செல்வங்கள்; தமிழரின் இலக்கியப் பேழைகள்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0




Sunday, February 26, 2012

சொல்லின் செல்வர் அறிஞர் இரா.பி.சேதுப்பிள்ளை ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 25/02/2012

92. செந்தமிழ் நிறைநிலா சொல்லின் செல்வர் அறிஞர் இரா.பி.சேதுப்பிள்ளை (1896-1961).

92. தமிழ் மொழியில் திறனாய்வு நூல்கள் வெளியிடப்படாத குறையைத் தமது ஆய்வு நூல்களால் அகற்றிய இப்பேரறிஞர், இனிய குரல் வளத்தோடு ஆற்றிய அறிவார்ந்த உரைப் பொழிவுகள் உயர்வு பெற்றவை.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

எழுச்சிகொண்ட தமிழ் மறவர் ஏந்தல் மங்கலங்கிழார் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 24/02/2012

91. இமைப்போதும் தமிழ் மறவா , எழுச்சிகொண்ட தமிழ் மறவர் ஏந்தல் மங்கலங்கிழார் (1895-1953).

91. தமிழுணர்வையும், தமிழ்க் கல்வியையும் ஊரெங்கும் பரப்பும் உயர் நோக்கில் தமிழ்ச் சங்கம் அமைத்து நாடு போற்றும் நற்றமிழ்த் தொண்டாற்றிய இப்பெருந்தகை.  வாழ்ந்த காலம் முழுமையும் தமிழை வாழ வைக்கவே  தமிழ்ச் சங்கம் பயன்பட்டது.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்

0

Thursday, February 23, 2012

நூலாசிரியர் வெ.சாமிநாதர் ~ 

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 23/02/2012

90. விழுமிய சிந்தனையாளர் வித்தக நூலாசிரியர் வெ.சாமிநாத சர்மா
(1895-1978).


90. தமிழறிந்த அனைவரும் உலகமறிந்த ஞானச் செறிவு பெற வேண்டுமென ஆசை கொண்ட இப்பேரறிஞர் தேசாபிமானத்தைத் தழைக்கச் செய்து, உலகாபிமானத்தைக் கிளைக்க செய்யும் நூல்களை எழுதினார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

Wednesday, February 22, 2012

பன்னூல் ஆசிரியர் பண்டிதர் அருணகிரிநாதர் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 22/02/2012

89. பைந்தமிழ்க் காவலர் பன்னூல் ஆசிரியர் பண்டிதர் அருணகிரிநாதர் (1895-1974).

89. தமிழாசிரியராகப் பணியாற்றி, புதின ஆசிரியராகப் புகழ்பெற்று, பத்திரிகை ஆசிரியராகவும் மேடைப் பேச்சாளராகவும் விளங்கித் தமிழ் காவலராகத் திகழ்ந்தார் இப்பேராசான்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

Tuesday, February 21, 2012

தமிழ்நூல் பதிப்பாளர் தவத்திருசிவஞான பாலைய அடிகளார் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 21/02/2012

88. தமிழ்க் கல்லூரி நிறுவனர் தமிழ்நூல் பதிப்பாளர் தவத்திருசிவஞான பாலைய அடிகளார் (1894-1965).

88. பல்லாயிரக் கணக்கான தமிழ்ப் புலவர்களை உருவாக்கியுள்ள மயிலம் தமிழ்க் கல்லூரி யைத் தமிழ் நாட்டில் தோன்றிய ‘முதல் கல்லூரி’யாக உருவாக்கம் கொள்ளச் செய்தவர் இப்பேரருளாளர்.
தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0



Monday, February 20, 2012

தமிழறிஞர் பூதலப்பட்டு சிரீராமுலு ~ 

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 20/02/2012

87. புதியநலம் வழங்கிய போற்றற்குரிய தமிழறிஞர் பூதலப்பட்டு சிரீராமுலுரெட்டி (1892-1971).

87. திருக்குறள், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களைத் தெலுங்கு மொழியில் கண்டு கொள்ள வைத்த இப்பேரறிவாளர் பாரதி பாடல்களையும் தெலுங்கில் மொழி பெயர்த்துள்ளார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0



Saturday, February 18, 2012

வளர்தமிழ் நூலாசிரியர் பேராசான் சதாசிவப் பண்டாரத்தார் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 18/02/2012


86. வரலாற்றுப் பேராசிரியர் வளர்தமிழ் நூலாசிரியர் பேராசான் சதாசிவப் பண்டாரத்தார் (1892-1960).
86. தமிழ்நாட்டு வரலாற்றைத் தமிழர் தமிழ் மொழியில் வழியே அறிந்து கொள்ள வழிகாட்டிய முன்னோடியாகத் திகழ்ந்த இப்பேராய்வாளர் உருவாக்கிய வரலாற்று நூல்கள் வரலாறு படைத்தவை.
தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0


Friday, February 17, 2012

அறிஞர் ந.சி.கந்தையா ~ அhttp://www.natpu.in/?p=20126றிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 17/02/2012

85. உரைநடைச் செல்வர் உணர்வூட்டிய தமிழர் அறிஞர் ந.சி.கந்தையா பிள்ளை (1893-1967).

85. பத்துப்பாட்டு, அகநானூறு, பதிற்றுப்பத்து, கலிங்கத்துப்பரணி, பரிபாடல், கலித்தொகை முதலிய சங்க நூல்கள் பலவற்றை உரை நடையில் வழங்கிய இப்பேராசிரியர் இலங்கைத் தமிழறிஞராவார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

Thursday, February 16, 2012

திருக்கோயில் செம்மல் திரிசிரபுரம் இரா.பஞ்சநதம் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 16/02/2012


84. தென்தமிழ்ச் செல்வர் திருக்கோயில் செம்மல் திரிசிரபுரம் இரா.பஞ்சநதம் பிள்ளை (1893-1968).

84. தமிழ்நாட்டுத் திருக்கோயில்கள் பற்றிய முறையான வரலாறுகளை முதன்முதலில் எழுத வழங்கிய இப்பெருமகனார் திருச்சியில் ‘தமிழ் ஆராய்ச்சிக் கழகம்’ என்றோர் அமைப்பை உருவாக்கம் கொள்ளச் செய்தார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

Tuesday, February 14, 2012

இலக்கியத் திருவிளக்கு பேராசிரியர் வேங்டராசுலு ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 14/02/2012

83. இலக்கணப் பெருங்கடல் இலக்கியத் திருவிளக்கு பேராசிரியர் வேங்டராசுலு (1893-1963).

83. இலக்கணத் துறையில் கடல்போன்ற இப்பெருந்தகையின் கருத்துப் பரப்பு. ஆய்ந்து வெளியிட்ட நூற்றுக்கணக்கான கட்டுரைகளில் போற்றத்தக்க புதிய செய்திகளை நிலை நாட்டியுள்ளது.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

சீர்திருத்தக் காவலர் அறிஞர் சொ.முருகப்பா ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 13/02/2012


82. செந்தமிழ்ச் செம்மல் சீர்திருத்தக் காவலர் அறிஞர் சொ.முருகப்பா (1893-1956).
82. ‘குமரன்’ என்னும் மாத இதழை 1923-ஆம் ஆண்டில் தொடங்கி வெளியிட்ட இப்பெருந்தகை. இதழைத் தமிழின் வளர்ச்சிக்கும், தமிழ் எழுத்தாளர்களின் மலர்ச்சிக்கும் களமாகக் கொண்டார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0



Sunday, February 12, 2012

தமிழ்ப் பேராசான் சுவாமி விபுலாநந்தர் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 11/02/2012

81. இலங்கைத் தமிழாகரர் இசை தமிழ்ப் பேராசான் சுவாமி விபுலாநந்தர் (1892-1949).

81. இசைத்தமிழ் ஞானக் கதிராக ‘யாழ்நூல்’ இயற்றியருளிய இப்பெரியார் மகாகவி பாரதியின் பாடல்களை ஈழ நாட்டில் பற்றிப் பரவிடச் செய்த பாரதி பக்தர்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்