Showing posts with label தமிழ்நல உறுதிமொழிஞர். Show all posts
Showing posts with label தமிழ்நல உறுதிமொழிஞர். Show all posts

Friday, November 27, 2015

தமிழ்நல உறுதிமொழிஞர் 05 : வேல்முருகன் சுப்பிரமணியன்

தமிழ்நல உறுதிமொழிஞர் 05 : வேல்முருகன் சுப்பிரமணியன்

பெயர்:
வேல்முருகன் சுப்பிரமணியன்
பணி:
கணித்துறை
தமிழுக்கு ஆற்றிவரும் தொண்டுகள்:
தமிழுக்கான கணித்தளமைப்பது.
தமிழுக்கு ஆற்ற எண்ணியுள்ள செயல்கள்:
https://www.facebook.com/groups/631787513634725/

முகவரி:
கலிஃபோர்னியா, அமெரிக்கா
மின்வரி: henavel@gmail.com
தமிழின் வாழ்வே தமிழர் வாழ்வு. எனவே, தமிழ் இறவாதிருக்க நாம் தமிழை மறவாதிருக்க வேண்டும் என உறுதி ஏற்கிறேன்.


Saturday, November 21, 2015

தமிழ்நல உறுதிமொழிஞர் 04 : மரு.பொன்முடி


தமிழ்நல உறுதிமொழிஞர் 04 : மரு.பொன்முடி

பெயர்:
மரு.வ. பொன்முடி
பணி:
மருத்துவப்பணி
தமிழுக்கு ஆற்றிவரும் தொண்டுகள்:
புணர்ச்சியிலக்கணத்தின் பயன்பாடுபற்றி எடுத்துரைத்தல். "தமிழ்வெல்லத்தாழி" என்னும் புணர்ச்சிவிளக்கநூலை வெளியிட்டிருத்தல்.
தமிழுக்கு ஆற்ற எண்ணியுள்ள செயல்கள்:
புணர்ச்சியில் பிழையற்றதாக நூல்களைத் திருத்திப்பதிப்பித்தல்
முகவரி:
முகவரி : எண் 1/1, கேலக்சியடுக்ககம், நுளம்பூர், சென்னை 37
மின்வரி: dr.ponmudi@gmail.com




Saturday, November 14, 2015

தமிழ்நல உறுதிமொழிஞர் 03 அ.சவரிமுத்து

தமிழ்நல உறுதிமொழிஞர் 03 அ.சவரிமுத்து

பெயர்:
அ.சவரிமுத்து
பணி:
எழுத்துப்பணிகள்.
வேர்ச்சொல்நூல்கள் 6 :
1.பழந்தமிழின் வேர்ச்சொற்களும் நரிக்குறவர் தாய்மொழி ஆய்வும்.
2.அமிழ்த மொழி மூலமொழி.
3. இயற்கை மொழித் தமிழ்
4. தமிழின் வேர்ச்சொற்கள் தொகுதி 1உம் உம்.
5.கணக்கியலுக்குப் பயன்படும் எண்கள்.
6.தம்பிரான் ஓர் ஆய்வு விளக்கம்

பிற :

7.விடியலை நோக்கிக் களப்பிரர் வரலாறு.
8.பழங்காலச் சோழர்கள் வரலாறு.
9.உறவுகள் கிடைத்தன.
10.விழித்தெழு தமிழா! விழுத்தெழு! (கவிதை).

இவை தவிர
புதுச்சேரியின் மாந்தன், புதிய உறவு, புதிய வானம்பாடி.கோவை முங்காரியில் கவிதை, சிறுகதை; அன்னை வேளாங்கண்ணி குரலொலியில் கவிதைகள்,சிறுகதைகள்.

முகநூலில் எழுத்தாளர் சவரிமுத்து, கவிஞர் சவரிமுத்து, உங்கள் தோழன் சவரிமுத்து பகுதியில் வேர்ச்சொல் கட்டுரைகள், அரசியல், வரலாற்றுச் செய்திகள் எழுதிவெளியிடுதல்.



தமிழுக்கு ஆற்றிவரும் தொண்டுகள்:
பயிற்று மொழி தமிழ் என்பதை வலியுறுத்தித்
திரு.அ.சி.சின்னப்பத் தமிழர், அரியலூர் அரங்க நாடன்,பெரம்பலூர் பாவலர்ஆடல் இவர்களோடு
இலால்குடி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் விளக்கக் கூட்டங்கள் போடுதல்; ஊர்ஊராகப் பரப்புரை செய்தல்.

எனது நூல்களையும் மற்ற ஆசிரியர்களின் நூல்களையும் ஊர்ஊராகக் கல்லூரியாகச் சென்று விற்றல்.

தமிழுக்கு ஆற்ற எண்ணியுள்ள செயல்கள்:
தமிழ் வளர்ச்சிக்கான பரப்புரைகளை விரிவாக்குதல்
முகவரி:
தந்தை:திரு.ச.அந்தோணி,
ஊர்:இடையாற்றுமங்கலம்,
வட்டம்: இலால்குடி என்னும் திருத்தவத்துறை.
மாவட்டம்: திருச்சிராப்பள்ளி .