(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 26/ 69 இன் தொடர்ச்சி)
தமிழ் ஆய்வின் விடிவெள்ளி
பேராசிரியர் ப. மருதநாயகம்
27/ 69
தமிழ்ப்பண்பாட்டின் மாட்சிமை (The Glory that was Tamil Culture(2018)
18 அதிகாரங்கள் உடையது இந்நூல். தொல்தமிழ்நாட்டுப் பண்பாட்டின் தனித்துவச் சிறப்புகளை மேனாட்டார் கருத்துகள் வழி விளக்கியுள்ளார். புறநானூறு, பதிற்றுப்பத்து, பரணர் பாடல், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, திருமந்திரம் முதலியவற்றின் மூலம் தமிழ்ப் பண்பாட்டுச் சிறப்புகளை விளக்குவதுடன் பல பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகளையும் தந்துள்ளார்.
இந்நூற் தலைப்புகள் வருமாறு:
- பண்டைய தமிழ்ப் பண்பாடு: இதன் தனித்துவம் (Ancient Tamil Culture: Its Uniqueness)
- இலக்கியமும் வரலாறும் : புறநானூறும் பதிற்றுப்பத்தும்(2. Literature and/as HIstory: Puranaanuuru and Pathitrupathu)
3.சங்கப்புலவர்களின் தனி உரிமைகள் (The prerogatives of Sangam poets)
- இறப்பு, புகழ் குறித்த உண்ணோக்கல்: புறநானூற்றுக் கையறுநிலைப்பாக்கள்(Meditations upon Death and Fame: Elegies in Puranaanuuru)
- பரணர் செய்யுள்: புதிய வரலாற்றாய்வை நோக்கி(The Poetry of Paranar: Towards A New Historicist Study)
- கலை எதிர் பாலியல்: அகநானூற்றிலிருந்து ஒரு படுக்கையறைக்காட்சி (Art versus Pornography: A Bedroom scene From Akanaanuuru)
- குறிஞ்சிப்பாட்டு : களவு மணமும் காந்தருவத் திருமணமும் (Kurinchipaattu:Kalavumanam and Gandharva marriage)
- நெடுநல் வாடையில் அரண்மனைப் பள்ளியறை(The Royal Bedchamber in Netunalvaatai)
- இந்தியக் காப்பியத் தோற்றம் : சங்கப்பாடல்களில் இருந்து குமாரசம்பவம் வரை(Birth of an Indian Epic : From Sangam Poems to Kumaracampavam)
- காப்பிய உவமம் கையாளுதல் : ஓமர், மிலிடன், சங்கப்புலவர்கள் (Employment of Epic Similes : Homer, Milton and the Sangam poets)
- மனித வாழ்வின் அவலம் :: சேக்சுபியரும் சங்கப் புலவர்களும்(On the Human Predicament: Shakespeare and the Sangam Poets)
- வாழ்வின் பொருளும் நோக்கமும்: பிளேட்டோவும் திருவள்ளுவரும்(On the Meaning and End of life : Plato and Thiruvalluvar)
- நட்பு : அரிசுட்டாட்டிலும் திருவள்ளுவரும்(On Friendship : Aristotle and Thiruvalluvar)
- திருக்குறள் : தன்னலமற்ற அன்பு நெறி(Thirukkural: Ethics of Altruistic Love)
- பழமொழி நானூறு: வாழ்வியல் கருவியாகப் பழமொழிகள்(Pazhamozhi Naanuuru : Proverbs as Equipment for Living)
- கவிதையாக மந்திரம்: திருமுலரின் திருமந்திரம்(Mantra as Poetry : Thirumuular’s Thirumanthiram)
- சிலப்பதிகாரம் : பத்தீனியன் ஆய்வு (Cilappatikaaram : A Baktinian Study)
- கவிதையாக மெய்ப்பொருள் :புத்தமும் மணிமேகலையும் (Philosophy As Poetry : Buddhism in Manimekalai)
இந்நூற்தலைப்புகளே இந்நூலின் பொருண்மையைத் தன்னளவில் விளக்குவனவாக அமைந்துள்ளன. தலைப்புகள் யாதாயினும் தமிழ்ப்பாடற் சிறப்புகளையும் தமிழ்ப்பண்பாட்டுச் சிறப்புகளையும் மேலை அறிஞர்களின் கண்ணோட்டங்கள் அடிப்படையிலும் ஆய்வு நோக்கிலும் இக்கட்டுரைகள் உணர்த்துகின்றன.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 28/ 69 )
No comments:
Post a Comment