Monday, March 26, 2012

செந்தமிழ்க் காவலர் அறிஞர் சாமி.சிதம்பரனார் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 26/03/2012


100. சீர்திருத்தச் செம்மல் செந்தமிழ்க் காவலர் அறிஞர் சாமி.சிதம்பரனார் (1900-1961).

100. அவர் சொன்னார் இவர் சொன்னார் என ஏற்பது இகழ்ச்சி; எவர் சொன்னாலும் என்ன சொன்னார்? எதற்காகச் சொன்னார்!’ என்பதை ஆய்ந்து ஏற்பதே வளர்ச்சி என்றார் இப்பேரறிவாளர்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்

Sunday, March 25, 2012

பெரும்புலவர் மயிலை சீனி வேங்கடசாமி ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 25/03/2012

99. ஆராய்ச்சிப் பேரறிஞர் அதிநுட்பப் பெரும்புலவர் மயிலை சீனி வேங்கடசாமி (1900-1980).

99. “மறைந்து போன தமிழ் நூல்கள்” என மகுடமிட்டு ஓர் அரிய திருநூலைப் படைத்த இப்பேரறிஞர் “களப்பிரர் காலத் தமிழகம்” என்னும் ஆய்வு நூல் வெளியிட்டுப் பெருமை பெற்றார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

Monday, March 19, 2012

அருந்தமிழ்க் களஞ்சியம் அறிஞர் கீ.இராமலிங்கனார் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 19/03/2012


98. ஆட்சிமொழி அருங்கலம் அருந்தமிழ்க் களஞ்சியம் அறிஞர் கீ.இராமலிங்கனார் (1899-1986).

98. ஆட்சிமொழியாகத் தமிழ் அரியணை ஏறுமென்ற நம்பிக்கைகளில் ஆட்சிச் சொற்களைத் தொகுத்து, அதனை நடைமுறைப்படுத்த செயற்கரிய பணிசெய்தவர் இப்பெரியார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்

Tuesday, March 06, 2012

தித்திப்புப் புதினப்பேரூற்று எழுதுகோல் மன்னர் பேராசிரியர் கல்கி ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 02/03/2012


97. தேசியத் தமிழ்க் கொண்டல் தித்திப்புப் புதினப்பேரூற்று எழுதுகோல் மன்னர் பேராசிரியர் கல்கி (1899-1954).

97. தமிழின் வரலாற்று நெடுங்கதைப் பிதாமகர் உரைநடைக்கு நலமும், வளமும் ஊட்டிய உரைநடைச் சித்தர் தமிழின் செழுமைக்குப் பன்முகப் பணியாற்றிய தமிழச் செல்வர்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்

Thursday, March 01, 2012

தத்துவநூல் ஞானமணி தவசீலர் சுவாமி சித்பவானந்தர் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 01/03/2012

96. தபோவனத்துத் தமிழ்ஞானி தத்துவநூல் ஞானமணி தவசீலர் சுவாமி சித்பவானந்தர் (1898-1985).

96. இப்பேரருளாளரின் நூல்கள் அனைத்தும் இறைவனது திருவடிப் பேற்றை அடைவதற்கு வழி காட்டுபவை. அதனையே நோக்கமாக்கி நிலை நாட்டுபவை அவை தமிழின் அருட் சொத்துகள்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0