Sunday, January 29, 2012

பைந்தமிழ்க் காவலர் கோவைக்கிழார் இராமச்சந்திரன் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 29/01/2012

68. பன்மொழி ஆர்வலர் பைந்தமிழ்க் காவலர் கோவைக்கிழார் இராமச்சந்திரன் செட்டியார் (1888-1969).

68. கல்வெட்டுத் துறையில் திட்பமும், நுட்பமும் பெற்றுத் திகழ்ந்த இப்பேரறிஞர் “சேக்கிழாரும் கல்வெட்டும்” “நால்வர்களும் கல்வெட்டுகளும்” “கல்லும் பேசுகிறது” ஆகிய கல்வெட்டாய்வு நூல்களைப் படைத்துள்ளார்
.
தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

Saturday, January 28, 2012

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் ~

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 28/01/2012

67. நாட்டுணர்வுக் காவலர் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை (1888-1972).

67. தெய்வ பக்தியும் தேச பக்தியும் ஊடும் பாவுமாக அமைந்த பாடல்களை வழங்கிக் காந்தியக் கவிஞர் எனப் போற்றப் பெற்ற இக்கவிப்பெருமான் நாவல் திறனாய்வு மொழிபெயர்ப்பு வரலாறு ஆகிய துறைகளிலும் பெருமை பெற்றார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

Friday, January 27, 2012

கரந்தைக் கவியரசு அறிஞர் வேங்கடாசலம் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 27/01/2012

66. கவின்தமிழ்க் காவலர் கரந்தைக் கவியரசு அறிஞர் வேங்கடாசலம் பிள்ளை (1888-1955).

66. “ஆசானாற்றுப்படை” “சிலப்பதிகார நாடகம்” “மணிமேகவை நாடகம்” ஆகிய புகழுக்குரிய நூல்களைப் படைத்தளித்த இப்பெருந்தகை. ‘அகநானூறு’க்கு உரை கண்டுள்ளார்.

                                    தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

Thursday, January 26, 2012

சைவப் பாரதியார் அறிஞர் சச்சிதானந்தம் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 26/01/2012


65. சாதனைச் செல்வர் சைவப் பாரதியார் அறிஞர் சச்சிதானந்தம் பிள்ளை (1887-1972).

65. தமிழ் மொழியையும், சைவ சமயத்தையும் பேணி வளர்த்த
சென்னை சைவ சித்தாந்த மகா சமாசத்தின் செயலாளர் பொறுப்பை இருபத்து நான்கு அகவையிலேயே  ஏற்ற இப்பெருமகனார் செய்த சேவையால் ‘சைவப்பாதிரியார்’ என அழைக்கப்பெற்றார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்



Wednesday, January 25, 2012

பெரும்புலவர் அ.மு.சரவணன் ~ 

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 25/01/2012

64. பெருஞ்சொல் விளக்கனார் பேராசான் பெரும்புலவர் அ.மு.சரவண முதலியார் (1887-1959).

64. வியக்கத்தக்க வித்தகப் பேரறிவு கொண்டிருந்த இப்பெரும்புலவர் எழுதிய ஆய்வு நூல் “அமுதடி அடைந்த அன்பர்” அறிஞர் பெருமக்களால் போற்றப்பெற்றது. உரையாற்றலால் சைவமும் தமிழும் தழைத்தோங்கச் செய்தப் பெரியார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்

Tuesday, January 24, 2012

கவிராயர் செகவீரபாண்டியனார் ~

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 24/01/2012

63. கம்பன்கலை காட்டியவர் திருக்குறள் நெறி ஊட்டியவர் கவிராயர் செகவீரபாண்டியனார் (1886-1971).

63. “திருக்குறட் குமரேச வெண்பா” “கம்பன் கலைநிலை” ஆகிய பெருநூல்கள் வெளியானபோது, இப்பேரறிவாளரின் அறிவாற்றலையும் எழுத்தாற்றலையும் அறிந்து கொண்ட அறிஞர் உலகம் வியந்து போற்றியது.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

Monday, January 23, 2012

அறிஞர் பி.சீ.ஆசார்யா ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 23/01/2012

62. மெய்யுணர்ந்த மேதை மேன்மைக்கொரு வழிகாட்டி அறிஞர் பி.சீ.ஆசார்யா (1886-1981)

62. கம்பனின் இராமகாதையை எழுத்தெண்ணிப் பயின்ற இப்பேரறிஞர். தமிழ் நாட்டில் அறிஞர் பலரைக் கம்பன் அடியார்களாய் ஆக்கியவர். ‘சித்திர இராமாயணம்’ என்னும் இதழ்த் தொடரால் பெரும் புகழ் ஈட்டியவர்.

                                     தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்

Sunday, January 22, 2012

வளர்தமிழ் நூலாசிரியர் நாவலர் வேங்கடசாமி ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 22/01/2012


61. வரலாற்றுப் பேராசிரியர் வளர்தமிழ் நூலாசிரியர் நாவலர் வேங்கடசாமி நாட்டார் (1884-1944).

61. “வேளிர் வரலாறு” “நக்கீரர்” “கபிலர்” “கள்ளர் சரித்திரம்” “சோழர் சரித்திரம்” ஆகிய இப்பேராய்வாளரின் நூல்கள் புகழார்ந்தவை மட்டுமல்ல. ஆராய்வாளர்களுக்கு புதிய விழிப்புணர்ச்சி ஊட்டியவை.

                                                தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்

0


Saturday, January 21, 2012

செந்தமிழ் மாமதி தணிகை மணி செங்கல்வராயர் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 21/01/2012

60. சித்தாந்தக் கலாநிதி செந்தமிழ் மாமதி தணிகை மணி செங்கல்வராய பிள்ளை (1883-1972).

60. பல்லாண்டுகள் முயன்று பயபக்தியுடனும் பைந்தமிழ் உணர்வுடனும் இப் பெருந்தகை படைத்தளித்த தேவார ஒளிநெறி, ‘திருவாசக ஒளிநெறி’ ‘திருக்கோவையார் ஒளிநெறி’ ஆகிய நூல்கள் செந்தமிழ்ச் சைவம் பெற்ற சீரிய சொத்துகளாயின.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0


Friday, January 20, 2012

தமிழ்த் தென்றல் திரு.வி.க. ~ 

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 20/01/2012
59. தமிழ்த்தொண்டர் தமிழ்த் தென்றல் அறிஞர் திரு.வி.க.(1883-1953).

59. “வீடுபேற்றை யான் விரும்பவில்லை பரம்பொருளின் திருவடிப் பேற்றையும் வேண்டவில்லை. மீண்டும் மீண்டும் தமிழ் மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் தொண்டாற்றத் தமிழனாகத் தமிழ் நாட்டில் பிறக்க வேண்டும்” எனக் கூறிய பெருமான்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0


Tuesday, January 17, 2012

தமிழவேள் உமாமகேசுவரனார் ~

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 17/01/2012
58. கரந்தை இளஞாயிறு கன்னித்தமிழ் நிறைநிலா தமிழவேள் உமாமகேசுவரன் பிள்ளை (1883-1941).

58. திருவையாற்றுச் சமசுகிருதக் கல்லூரியை திருவையாற்று அரசர் கல்லூரியாக்கிப் புலமை பெறும் தமிழ்ப் பட்டப் படிப்பைக் கற்றுக் கொடுக்கச் செய்த இப்பேரறிஞர் ‘தமிழ்வேள்’ எனப் போற்றப் பெற்றார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

Monday, January 16, 2012

இரசிகமணி டி.கே.சி ~

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 16/01/2012


57. ‘வட்டத்தொட்டி’ நாயகர் வளர்தமிழ் ஆர்வலர் இரசிகமணி டி.கே.சி. (1882-1954).

57. தமிழில் எல்லாம் உண்டு தமிழின் கவிச் சுவைக்கு ஈடுமில்லை இணையுமில்லை. தமிழால் அறிவியல் மட்டுமன்று அனைத்து இயல்களையும் கற்க முடியும்’ எனச் சான்றுகளுடன் கொடுத்த பெருந்தகை.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்






Sunday, January 15, 2012

மாக்கவிஞர் பாரதி ~அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 15/01/2012

56. பாட்டுக்கொரு புலவன்  மாக்கவிஞர்  பாரதி (1882-1921).

56. மொழிப்பற்றை மூட்டவும், நாட்டுப்பற்றை ஊட்டவும், உலகளாவிய மானுட நேயத்தை ஈட்டவும், தமது கவிதைகளை கருத்துகளைத் கருவிகளாகப் பயன்படுத்திய மாக்கவிஞர்; மக்கள் கவிஞர்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்



 

Saturday, January 14, 2012

பண்டிதமணி கதிரேசனார் ~

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 14/01/2012


55. இருமொழிப் புலமையாளர் இனியதமிழ்ப் பன்னூலார் பண்டிதமணி கதிரேசச் செட்டியார் (1881-1953).

55. திருவாசகத்திற்கு உரை எழுதப் பல ஆண்டுகள் திட்டமிட்டு, சமய நூல்களைக் கற்று மெய்ப்பொருள் உணர்த்தும் தத்துவ நூல்களில் ஆழ்ந்து உரை எழுதி, வெளியிட்ட இப்பெருமகனாரின் ‘கதிர்மணி விளக்கம்’ சமயச் சாதனையாகப் போற்றப் பெற்றது.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

வீரக்கனல் வ.வே.சு.ஐயர் ~

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 13/01/2012

54. கம்பநிலையம் கண்டவர் கதை, ஆய்வுப் பிதாமகர் வீரக்கனல் வ.வே.சு.ஐயர் (1881-1925).

54. தேசத்திற்காகத் துப்பாக்கியை ஏந்திய இப்பெருந்தகை தமிழுக்காக எழுதுகோலைப் பிடித்தார். துப்பாக்கியை ஒரு கால கட்டத்தில் தூர எறிந்தார். எழுதுகோலை இறக்கும்வரை பிரிந்தாரில்லை. பிடியைத் தளர விட்டாரில்லை.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0



அறிஞர் க.நா.சிவராசபிள்ளை ~+

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 12/01/2012
53. கம்பராமாயணப் பதிப்பாளர் கால ஆராய்ச்சி அறிஞர் க.நா.சிவராசபிள்ளை (1879-1941).

53. கால ஆராய்ச்சியில், இப்பேரறிவாளரின் கருத்தாய்வு ஒரு புதிய வழித்தடத்தை ஆராய்வறிஞர்களின் நடைத் தடமாக்கிய வித்தகம். புகழும் போற்றுதலும் பெற்றுக் கொடுத்தது.


தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

Wednesday, January 11, 2012

நாவலர் சோமசுந்தர பாரதியார் ~

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 11/01/2012
52. இளசைப் புலவர் இனியதமிழ் ஆய்வாளர் நாவலர் சோமசுந்தர பாரதியார் (1879-1959).

52. “தசரதன் குறையும் கைகேயி நிறையும்” என்னும் இப்பெரு நாவலரின் ஆய்வு நூலைக் கண்ட அறிஞர் உலகம். பிரமதித்துப் போற்றியது எழுத்தாற்றலும், உரையாற்றலும் கொண்டிருந்தார் இப்பேரறிஞர்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

கவிமணி சி.கே.சுப்பிரமணியம் ~

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 10/01/2012


51. தவத்தமிழ் மாமணி சிவத்திருக் கவிமணி சி.கே.சுப்பிரமணிய முதலியார் (1878-1961).

51. “திருத்தொண்டர் புராண விரிவுரை” மாணிக்க வாசகர் அல்லது நீத்தார் பெருமை” ஆகிய இரு திருநூல்கள். இப்பேராய்வாளரின் அயரா உழைப்புக்கும் ஆய்வுத்திறனுக்கும் அரிய எடுத்துக்காட்டுகள்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0
 

மூதறிஞர் இராசாசி ~

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 09/01/2012
50. அரசியல் அறநாயகர் அருந்தமிழ்ப் பன்னூலார் மூதறிஞர் இராசாசி (1878-1972).

50. இப்பேரறிஞரின் “வியாசர் விருந்து” “சக்கரவர்த்தித் திருமகன்” ஆகிய இரு நூல்களும் எந்தத் தமிழ் நூலும் விற்பனையில் இதுவரை பெற்றிராத வரலாறு படைத்து விற்பனையில் வாகை சூடின.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்

»                                                                                   «


அமுதகவி சாயபுமரைக்காயர் ~

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 08/01/2012

49. கற்றவர் போற்றிய காரைக்கால் அமுதகவி சாயபுமரைக்காயர் (1878-1950).

49. தமிழ், அரபு, மலாய் ஆகிய மூன்று மொழிகளிலும் திறம் பெற்றிருந்த இப்பெரும் புலவர் தமிழின் அனைத்து வகை யாப்புகளிலும் பாடல்களை அமைத்துள்ளார். வழக்கொழிந்த பல யாப்புகளையும் பயன்படுத்தியுள்ளார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்

0

முதுபெரும் புலவர் மு.இராகவையங்கார் ~அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 07/01/2012


48. முகவை மூதறிஞர் முதுபெரும் புலவர் மு.இராகவையங்கார் (1878-1960).

48. “வேளிர் வரலாறு” “ஆழ்வார்கள் காலநிலை” “சேரன் செங்குட்டுவன்” ஆகிய நூல்களைப் படைத்து, வரலாற்று ஆய்வில் வரலாறு கொண்ட இப்பேரறிஞர் சிலாசாசனங்களை வெளிப்படுத்திச் சிறப்புப் பெற்றார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

பேரறிஞர் மறைமலை அடிகளார் ~

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 06/01/2012

47. தனித்தமிழ் இயக்கத் தந்தை தமிழ்ப் பேரறிஞர் மறைமலை அடிகளார் (1876-1950).

47. “கற்றவராயினும் செல்வம் பெற்றவராயினும் தமிழுணர்வு அற்ற தமிழர். மானம் கெட்டவரென மதிப்பீடு செய்வோம். அத்தகைய மானங்கெட்ட மனிதரை மதிக்காதீர்” என முழங்கினார் இப்பெருமான்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்

0

பைந்தமிழ் ஆசான் கா.நமச்சிவாயம் ~

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 05/01/2012

46. பாடநூல் வழங்கிய பைந்தமிழ் ஆசான் கா.நமச்சிவாய முதலியார் (1876-1937).

46. பதினான்கு ஆண்டுகள் மாநிலக் கல்விக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்த இப்பேரறிவாளர், ‘தமிழ் வித்துவான்’ தேர்வை ஏற்படுத்தி தமிழ் கற்றோர் பல்கலைக் கழகப் பட்டம் பெறும் வாய்ப்பளித்தார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0


Wednesday, January 04, 2012

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ~

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 04/01/2012


45. குழந்தை இலக்கியக் கோமான் குமரிநாட்டுப் பெருமான் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (1876-1954).

45. வாழ்ந்த காலத்திலேயே சீரும் சிறப்பும் பெற்ற புகழார்ந்த கவிமணி உமர்கய்யாம் பாடல்கள். ஆசிய சோதி ஆகிய மொழிபெயர்ப்புப் பாடல்களை மூலநூல் போன்றே தோற்றம் தருமாறு அருளிய வித்தகப் பெருங் கவிஞர்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0


Tuesday, January 03, 2012

சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் ~

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 03/01/2012


44. மாத்தமிழ்ச் செம்மல் மகாமதிப் புலவர் சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் (1874-1950).

44. ‘பாவலர் ஐயா’ எனப் போற்றி உரைக்கப் பெற்ற இப்பெரும்புலவர் நூறு அவதானங்களை நுண்ணறிவு கொண்ட சான்றோர் முன்னிலையில் நிகழ்த்தி ‘சதாவதானி’ ‘மகாமதிப் புலவர்’ என்றெல்லாம் பாராட்டப் பெற்றார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்


Monday, January 02, 2012

நாடகத் தந்தை பம்மல் சம்பந்தம் ~ 

அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 02/01/2012


43. தளர்வறியாக் கலைஞர் தமிழ் நாடகத் தந்தை பம்மல் சம்பந்த முதலியார் (1873-1964).

43. தமிழ் நாடகங்களை மட்டுமல்லாது, தமிழ் நூல்கள் பலவற்றைப் படைத்த இப்பேரறிஞர், தமிழ் அறிஞராகவும், பன்னூல் ஆசிரியராகவும் புகழ் பெற்றுப் ‘பத்ம பூசண்’ விருதினை அடைந்தார்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0

Sunday, January 01, 2012

தவத்திரு ஞானியார் அடிகள் ~ அறிவோம் அறிஞர்களை!

பதிவு செய்த நாள் : 01/01/2012


42. சீலநெறிப் பெருமான் ஞானத்தமிழ் அருளாளர் தவத்திரு ஞானியார் அடிகள் (1873-1942).

42. தமிழைத் தழைக்கச் செய்து செழுமையுறச் செய்யும் நோக்கில் ஓர் அமைப்பை சங்கம் கண்ட மதுரையில் தாங்கள் உருவாக்க வேண்டும் எனப் பாண்டித்துரைத் தேவரிடம் வேண்டினார் இப்பேரருளாளர்.

தரவு : இலக்குவனார் திருவள்ளுவன்
0